நான் நடந்து கொண்டே இருந்தேன். அவனும் கூடவே வந்தான். அவனிடம் எதுவும் பேசவில்லை. பேசுவதாலும் ஒன்றும் ஆகிவிடபோவதில்லை என்று நான் நன்றாக அறிந்திருந்தேன். அது ஒரு மிகப்பெரிய வனம். பொட்டு வெயில் பூமியில் விழாதவாறு அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள். தங்கள் கடமை நிற்பதே என்பது போல நின்றிருந்தன. இந்த பூமியை தாங்கள் தான் இயக்குகிறோம் என்ற உண்மை தெரிந்தும் மௌனமாய் நிற்கின்றன. இயற்கையின் வனப்பை வியந்து சந்தோஷித்திருந்தேன். அவன் திடீரென்று மறைந்துவிட்டான். நான் சந்தோசமாக இருக்கும் பொழுது அவன் என்னிடம் இருப்பதில்லை. நான் அவனை தேடபோவதில்லை. என்னை விட்டு நீங்கினால் போதும் என்ற மனநிலையை எட்டி விட்டேன். அவனிடம் எனக்கு எப்பொழுதும் ஒரு சலிப்பு உண்டு. என்னை வழிநடத்துகிறேன் என்ற ஒரு மனநிலையில் என்னையே கண்காணித்து கொண்டிருக்கிறான்.
ஒரு இறகை சுமந்துகொண்டு நடப்பது போல இருந்தால், நான் உண்மையில் மகிழ்ச்சியுடன் நடந்திருப்பேன். ஆனால் அவன் ஒரு பெரிய பாறாங்கல் போல் அல்லவா இருக்கிறான். அவனை சுமந்து கொண்டு நடப்பது ஒரு பெரிய அழுத்தமாக இருக்கிறது. சுவாசக்குழாயை அடைப்பது போல ஒரு உணர்வு.என்னை எப்பொழுதும் பின்னோக்கி இழுப்பது போல ஒரு எண்ணம். தடம் மாறுவதால் உண்டாகும் இழப்புகளை மட்டுமே என்னை சிந்திக்க வைக்கும் ஒரு மனோபாவம். இவனுடன் வாழ்ந்திட முடியுமா என்ற மாயகொக்கியை என்றென்றும் என் முதுகில் குத்தியிருப்பதை போல ஒரு உணர்ச்சி.
இவன் என்னுடன் மட்டும் தானா இருக்கிறான். நான் தனியாக நடக்கையிலும், வேதாளம் போல உப்புமூட்டையாக இருக்கிறான். உண்மையில் அவன் நம் அனைவரின் முதுகிலும் ஏறி அமர்ந்திருக்கிறான் என்கிற வரையில் எனக்கு ஒரு மெல்லிய ஆசுவாசம். ஜீவாத்மா, பரமாத்வா போல கண்ணுக்கு தெரியாமல் அடிநெஞ்சில் அழுத்திகொண்டிருக்கிறான். புவிஈர்ப்பு இல்லாத ஒரு இடம் பூமியில் இல்லாது போல , இவன் இல்லாமலும் நான் இருந்ததில்லை. மனம் அலைபாயும் பொழுதெல்லாம், அம்மா திட்ட தயங்கியபொழுதெல்லாம், அப்பா கண்டிக்க மறந்தபோதெல்லாம் இவன் தன்னுடைய கடமையை விட்டு விலகியதில்லை. இல்லாத கைகளால் என்னை அறைந்திருக்கிறான், சொல்லாத வார்த்தையால் என்னை துளைத்திருக்கிறான், வெட்கப்பட வைத்திருக்கிறான்.
எனக்கு ஏன் இவன் மேல் இவ்வளவு கோபம். என்னுடைய சந்தோசத்தை தடுப்பதாலா? என் மனம் போன போக்கில் போக அனுமதிக்காததாலா? ஒருவேளை சமுதாயத்தின் நியதிகளுக்கு உட்பட்டு என்னை நடத்துவதாலா? இருக்கலாம். இவன் என்னுடன் இருப்பதால் மட்டுமே நான் இன்றளவில் உயிர்ப்புடன் இருக்கிறேன். சமுதாயம், சட்டம், சுயஒழுக்கம், பரிவு, கருணை போன்றவற்றின் ஆதிக்கங்களை இவனிடம் கொடுத்துவிட்டதாலோ என்னவோ, செல்லும் பாதையில் ஒரு நிம்மதியை இவன் பரிசாக திரும்ப தருகிறான்.
இன்று அடர்ந்த காட்டில், இயற்க்கையின் ஆதிக்கத்தில் நடந்து சென்று கொண்டிருக்கிறேன். இவன் என்னிடம் இல்லை இப்பொழுது. தெரியும். தவறேதும் செய்யாமல் மகிழ்ச்சியுடன் இருக்கும்பொழுது இவன் ஒளிந்திருந்து பார்த்து மகிழ்கிறான்.
மனசாட்சி :) :)

good insight !
ReplyDelete