அன்று ஆபிஸ் முடிந்து வீடு திரும்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். வெகுநேரமாக பேருந்து வரவில்லை. பஸ் ஸ்டாப்பிலும் கூட்டம் அவ்வளவாக இல்லை. லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. நனையும் அளவிற்கு தூறல் இல்லை. ஆனாலும் நனைந்தபடி நின்றிருந்தேன்.
தூரத்தில் பேருந்து வருவது தெரியவே தயாரானேன். மூச்சிரைக்க வந்த பஸ், ஸ்டாப்பில் நின்றது. உட்கார இடம் இருக்குமா என்ற பதட்டம் வேறு. டிராபிக் நேரத்தில் ஒண்ணரை மணி நேரம் நின்று கொண்டு வீடு வருவது கொடுமை. ஏறியவுடன் டிக்கெட் வாங்கி உள்ளே சென்றேன். கிட்டத்தட்ட பஸ் நிறைந்திருந்தது. நொந்து கொண்டேன். ஒரு சீட் காலியாக இருந்தது. அது எதிர் எதிராக அமரும் சீட். அதில் அமர்ந்து கொண்டேன். எதிரில் ஒரு இளைஞி. அநேகமாக IT கம்பெனியில் வேலை பார்ப்பவள் போல தான் தெரிந்தாள். அழகாவும் இருந்தாள்.
முதல் ஐந்து நிமிடம் வெளியில் மழை தூறல்களை வேடிக்கை பார்த்து கொண்டே இருந்தேன். அவளை நேருக்கு நேர் பார்க்கலாமா என்ற ஒரு சிறு குறுகுறுப்பு வேறு என்னை படுத்திக்கொண்டிருந்தது . படு அலட்சியமாக திரும்புவது போல அவளை பார்த்தேன். மின்னல் போல சட்டென்று என்னை பார்த்து கொண்டிருந்த பார்வையை விலக்கினாள். இது வரை என்னை பார்த்துக்கொண்டிருந்தாள் என்ற எண்ணமே மின்சாரம் பாய்ச்சிய ஒரு நடுக்கத்தை தந்தது. முழுதும் மூடியிருந்தும் கண்ணாடியின் வழியாக தூறல் முகத்தில் தெளிப்பது போல ஒரு சிலிர்ப்பு.
நான் அவளை ரகசியமாக பார்ப்பது தெரிந்து, வெளியில் பார்ப்பது போல பாவனை செய்து கொண்டாள். சினேகமாக சிரிக்கலாமா என்று ஒரு யோசனை. சரி வேண்டாம். ஏசி காற்று பட்டு காதோரத்தில் அவள் கூந்தல் பறந்தது ஒரு கவிதை. நான் பார்த்தது கண்டு சரி செய்து கொண்டாள். முறைப்பது போல ஒரு முகபாவம். ஆனாலும் ஏசி காற்று படும்படியாகவே அமர்ந்துகொண்டாள். கூந்தல் அழகாக பறந்துகொண்டு தான் இருந்தது.
பேருந்தில் ஒரு சில பெண்கள் ஏறினார்கள். எழுந்து இடம் கொடுக்க வேண்டுமா என்று குழம்பிக்கொண்டிருந்தேன். எழுவது போல லேசாக பாவனை செய்தேன். வேண்டாம் என்பது போல அவள் கண்களில் ஒரு கெஞ்சல். இல்லையில்லை மிரட்டல். மனப்பிரம்மையா. கண்டிப்பாக இருக்காது. போனில் யாரிடமோ பேசுவது போல பார்த்துக்கொண்டிருந்தேன். போனில் எனக்கு பெண் பார்த்துகொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிகொண்டிருந்தேன். களுக் என்று ஒரு சிரிப்பு. உதட்டுக்கு வெளியே வராத ஒரு புன்சிரிப்பு. எனக்கு இதயத்தில் அமிலம் ஓடிய ஒரு வெப்பம். இந்த பயணம் நீண்டு கொண்டேஇருக்காதா என்ற ஒரு ஏக்கம். என் அசைவுகளை,எண்ணங்களை ரசிக்கிறாள் என்ற எண்ணமே சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
அவள் எழுந்து இறங்குவதற்கு தயாரானாள். என்னை மெதுவாக கடந்து நடந்து சென்றாள். அவள் கால் என்மீது படவில்லை என்று அறிந்தும், பட்டதாக நினைத்து சாரி சொன்னாள். அந்த சாரி என் காதில் பலமுறை எதிரொலித்து கொண்டிருந்தது. பேருந்து நின்றது. இறங்கிவிட்டாள். பேருந்து மெதுவாக அவளை கடந்து சென்றது. அவள் பார்க்கவில்லை. கணமான ஒரு மௌனம். எதிர்பார்த்தலில் ஒரு ஏமாற்றம். மெதுவாக சென்ற பேருந்து சிக்னலில் நின்றது. கண்ணாடியில் தலை சாய்த்து அமர்ந்திருந்தேன். அனிச்சையாக வெளியே பார்த்தேன். பேருந்தை கடந்து நடந்து கொண்டிருந்தாள். பேருந்து கிளம்பியது. அவளை கடந்த அந்த தருணம் சலனமின்றி அமர்ந்திருந்தேன். மெதுவாக என்னை பார்த்து தலை சாய்த்து சிரித்தாள் :) :) :)

Is she divya?
ReplyDeleteIs she divya?
ReplyDeleteVery nice to read this....
ReplyDeleteVery nice to read this....
ReplyDeleteVery nicely written!..for sure all the guys traveling by bus will come across such an experience ��
ReplyDelete