வருடம் - அக்டோபர் 2008:
மாலை சுமார் 4 மணி இருக்கும். வானம் மேகமூட்டமாய் இருந்தது. லேசான சாரல் முகத்தில் ஊசி போல குத்திக்கொண்டிருந்தது. அவன் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேர்ந்தான். அவன் அரக்கோணம் செல்ல வேண்டும். மின்சார ரயிலில் சென்றுவிடலாம் என்று முடிவு செய்தான். பயணச்சீட்டு வாங்கும் இடத்தை நோக்கி நடக்கலானான். சாரை சாரையாய் மக்கள். பள்ளம் நோக்கி ஓடும் நீர் போல வேகமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். அவன் காகித கப்பல் போல அக்கூட்டத்தில் மிதந்து சென்றுகொண்டிருந்தான். பயணச்சீட்டு தரும் இடத்தில் நீண்ட வரிசை. ஒரு பூரான் போல. ஒரு வரிசையில் நின்றுகொண்டான். வரிசை வேகவேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. சிலர் வரிசையில் குறுக்கே வந்து நின்றார்கள். இவர்கள் இடையில் வந்து நின்றவர்களுடன் வாக்குவாதம் செய்தார்கள். இவர்களை முறைத்து கொண்டே வரிசையின் இடையில் நின்றுகொண்டார்கள். முணுமுணுத்துக்கொண்டே முறைத்தார்கள். பூரான் நகர்ந்து கொண்டே இருந்தது. அவன் முறை வந்தது. அவன், "ஒரு அரக்கோணம்" என்று கூறி கோவில் கோபுரத்தின் நுழைவாயிலின் சிறிய வடிவம் போல இருக்கும் துளையின் உள்ளே பணத்தை நுழைத்தான். உள்ளே இருந்தவர் இயந்திரத்திலிருந்து பயணச்சீட்டை இயந்திரத்தனமாக எடுத்து மீதி சில்லறையுடன் கொடுத்தார். அவன் சீட்டை எடுக்கும் முன்பே, இன்னும் நகரவில்லையா என்பது போல பார்த்து, "Next" என்று குரல் கொடுத்தார். அவன் நகர ஆரம்பித்தான். ஒரு 60 வயது மதிக்கத்தக்க பெரியவர் "தர்மராசா" என்று கையை நீட்டினார். அவன் கையிலிருந்த மீதி சில்லறையில் ரூ.5 ஐ அவரிடம் கொடுத்தான். அவர் "தர்மராசா நல்லா இருக்கணும், உங்களுக்கு எல்லாம் நல்லா நடக்கும்" என்று அழுக்கு பல் தெரிய சிரித்தார்.
அவன் வேகமாக நடைமேடையை நோக்கி நடந்தான். அங்கே அரக்கோணம் செல்லும் ரயில் தயாராக இருந்தது. ரயிலின் உள்ளே சென்று, சுற்றி ஒரு முறை நோட்டம் விட்டான். உட்கார்வதற்கு இடம் இல்லை என்பதை தெரிந்து கொண்டு நுழைவாயிலின் எதிர்புறம் உள்ள வழியின் ஓரம் நின்றுகொண்டான். வண்டி இன்னமும் புறப்படவில்லை. ரயிலில் பலதரப்பட்ட மக்கள். மாணவர்கள், சிறு வியாபாரிகள், குடும்பத்தலைவிகள், தொழிலாளர்கள். இது அவர்கள் தினமும் செல்லும் ரயில்வண்டி. அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் போல. ஒரு தாய் தொட்டிலில் குழந்தையை தாலாட்டுவதை போல, அவர்களை இந்த ரயில் தினமும் தாலாட்டி அழைத்து செல்கிறது. வண்டி கிளம்பும் நேரம் ஆகிவிட்டது. அவன் பிளாட்பாரத்தை அனிச்சையாக பார்த்தான். அவள் வேகமாக ஓடிவந்து அவன் இருந்த பெட்டியில் ஏறினாள். கையில் ஒரு பெரிய சக்கரம் வைத்த பெட்டி. உட்கார இடம் இல்லை என்று தெரிந்து கொண்டு இவனுக்கு எதிரில் வந்து நின்று கொண்டாள். பெட்டியை அருகில் வைத்து கொண்டாள். அவனை ஒருமுறை பார்த்துவிட்டு வெளியே பார்க்க ஆரம்பித்தாள். வண்டி மெதுவாக நகர ஆரம்பித்தது.
வருடம் - அக்டோபர் 2017:
மாலை 4 மணி. வானம் கருப்பு போர்வை போர்த்திருந்தது. விட்டு விட்டு தூறிக்கொண்டிருந்தது. அரக்கோணம் ரயில் நிலையம் பரபரப்பாக இருந்தது. அவர்கள் இருவரும் படபடப்புடன் ஓடி, "2 சென்னை" என்று பயணசீட்டு வாங்கிக்கொண்டு நடைமேடைக்கு வந்து சேர்ந்தார்கள். நடைமேடையில் சென்னைக்கு செல்லும் மின்சார ரயில் தயாராக இருந்தது. அவன் கையில் குழந்தையை தூக்கி கொண்டு வேகமாக ஓடிக்கொண்டிருந்தான். அவள் அவனை பின்தொடர்ந்து ஓடி கொண்டிருந்தாள். அவர்கள் வண்டியில் ஏறவும் வண்டி புறப்படவும் சரியாக இருந்தது. வண்டியில் உட்கார இடமில்லை. நேராக நுழைவாயிலின் அருகில் நின்றுகொண்டார்கள். அவள் முகம் சூடான எண்ணையில் விழுந்த கடுகை போல வெடித்துக்கொண்டிருந்தது. அவன் அவளை பார்க்கவில்லை. "ஒரு இடம் புடிக்க வழியில்லை, இப்படியேவா சென்னை வரைக்கும் நின்னுகிட்டு போறது, அதுவும் படிகிட்ட. எல்லாம் என் தலையெழுத்து" என்று கடுகடுத்தாள். அவன் வெளியே வெறித்துக்கொண்டிருந்தான்.
வருடம் - அக்டோபர் 2008:
வண்டி மெதுவாக பேசின் பிரிட்ஜ் வந்து சேர்ந்தது. கூட்டம் ஏற ஆரம்பித்தது. அவள் பெட்டியை நகர்த்தி ஒரு அடி நகர்ந்து அவன் அருகில் நின்றாள். அவன் வெளியே வேடிக்கை பார்ப்பது போல அவளை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டான். முகத்தில் அறைந்த காற்றில் பறக்கும் கூந்தலை ஆள்காட்டி விரலால் காதின் பின்னால் வைத்து சரி செய்தாள். அதை மீறியும் ஒரு கற்றை கூந்தல் அவன் கண்களில் விழுந்தது. அவள் அவன் முகத்தை பார்த்து எந்த சலனமுமில்லாமல்"சாரி" என்றாள். அவனுக்கு ரயில் சத்தத்தை மீறி இதயம் துடித்துக்கொண்டிருந்தது. "நீங்க எங்க போகணும்" என்று கேட்டான். அவள் அதை கவனிக்காததை போல், பின்னே வேகமாக நகரும் கட்டிடங்களை பார்க்க ஆரம்பித்தாள். கூட்டம் படியை நோக்கி நகர ஆரம்பித்தது. வேகமாக நகர்ந்த ஒருவரின் கால் பட்டு, அவளுடைய பெட்டி வெளியே விழ நேர்ந்த பொழுது, அவன் அதை லாவகமாக பிடித்து காப்பாற்றி விட்டான். அதை அவளும் பார்த்துவிட்டாள். அவள் சிநேகமுடன் "ரொம்ப தேங்க்ஸ்" என்று சிரித்து கொண்டே சொன்னாள். அவனும் சிரித்து கொண்டே "நீங்க எங்க போகணும்" என்றான். அவள் சிரித்து கொண்டே "அரக்கோணம். ரயிலில் படிகிட்ட நின்னு காத்து வாங்கிகிட்டு போறதே தனி சுகம்" என்றாள். அவனும் சிரித்து கொண்டே "ஆமாம்" என்றான். உள்ளே அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் அருகில் ஒரு இடம் காலியாகியது. அவள் அங்கு போக எத்தனித்து, திரும்ப வந்து நின்று படிஅருகே நின்று கொண்டாள். அவர்களை பற்றி நிறைய பேசிக்கொண்டே இருந்தார்கள். செல் நம்பர் பரிமாறிக்கொண்டார்கள். அடிக்கடி கண்ணோடு கண் பார்த்து சிரித்து கொண்டார்கள்.
வருடம் - அக்டோபர் 2017:
ரயில் அரக்கோணத்திலிருந்து இரண்டு நிறுத்தங்கள் தாண்டி வந்திருந்தது. இன்னமும் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. படியின் ஓரம் நின்றிருந்தார்கள். "இப்படியேவா படிகிட்ட நின்னுகிட்டு போறது, காத்து அடிக்கிது, போய் இடம் இருக்கானு பாருங்க" என்று அவனை கத்திக்கொண்டிருந்தாள். அவன் குழந்தையை தூக்கிக்கொண்டு ஒரு முறை பார்த்துவிட்டு வந்து "இல்லை" என்றான். அவள் கடுகடுவென முறைத்தாள். "ஏன் உங்க அப்பா கிட்ட சொல்லி ஒரு கார்ல வரலாம்ல, ஏன் அது கூட முடியாதா அவரால" என்றான். "அப்பறம் நீங்க எதுக்கு புருஷன்னு இருக்கீங்க, நீங்க தான் பாத்துக்கணும். 10 வருஷம் முன்னே நான் அந்த ரயில்ல வந்துருக்க கூடாது. எல்லாம் விதி" என்றாள். "கீழ விழ போன பெட்டியை அப்படியே விட்டுருக்கணும். பெரிய ஹீரோ மாதிரி காப்பாத்தி இப்போ அனுபவிக்கிறேன்" என்றான். அவர்கள் சண்டை அதிகமாக ஆரம்பித்தது. அவன் கையில் இருந்த குழந்தை எதுவும் புரியாமல் அழ ஆரம்பித்தது. அதற்குள் ஆவடி ரயில் நிலையம் வந்திருந்தது. அவர்கள் சண்டை நிற்கவில்லை.
வருடம் - அக்டோபர் 2008:
ரயில் ஆவடி நிலையம் வந்திருந்தது. அவர்கள் இன்னமும் சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது எதிரே நின்றிருந்த சென்னைக்கு செல்லும் மின்சார ரயில் படியில் யாரோ ஒரு கணவன் மனைவி சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். இவர்கள் இருவரும் ஒரு நொடி யோசிக்க ஆரம்பித்து, பின்னர் சிரித்து பேசிகொள்ள ஆரம்பித்தார்கள். ரயில் ஆவடியிலிருந்து கிளம்பியது. என்ன தோன்றியதோ, ஒரு முறை சென்னைக்கு சென்றுகொண்டிருந்த மின்சார ரயிலை ஒரு முறை பார்த்தான். அவள் "என்ன" என்றாள். "ஒண்ணுமில்லை" என்றான். ரயில் சிறிது நேரத்தில் அரக்கோணம் வந்து சேர்ந்தது. உள்ளே இடம் இருந்தும் இவர்கள் உட்காராமல் படியருகே நின்று பேசிக்கொண்டே வந்தார்கள். இறங்கியவுடன் "நான் அப்பறம் போன் பண்றேன்" என்று கூறி சிரித்து கொண்டே விடை பெற்றாள்.
வருடம் - அக்டோபர் 2017:
அவர்களுக்கு கடைசி வரை உட்கார இடம் கிடைக்கவே இல்லை. நின்று கொண்டே வந்தார்கள். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேர்ந்தார்கள். இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. அவன் குழந்தையுடன் விறுவிறுவென நடந்து கொண்டிருந்தான். ரயில் நிலையத்தின் வெளியே வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது ஒரு 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் "தர்மராசா" என்று கை நீட்டினார். அவன் பையிலிருந்து ரூ. 5 எடுத்து கொடுத்தான். "தர்மராசா நல்ல இருக்கணும், உங்களுக்கு எல்லாம் நல்லா நடக்கும்" என்று அழுக்கு பல் தெரிய சிரித்தார். அவன் ஒரு நொடி நின்று, "இப்போவாவது நீங்க சொல்றது பலிக்கட்டும்" என்று நடக்க ஆரம்பித்தான். இருவரையும் பார்த்து அவர் மறுபடியும் சிரித்தார்.

No comments:
Post a Comment