சில நாட்களாகவே நான் இதைப்பற்றி எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன். நான் ஒவ்வொரு முறை இருசக்கர வாகனத்தில் இவ்வழியே செல்லும் போதெல்லாம் இதை பற்றி எழுத வேண்டும் என்று தோன்றும். எனக்கு எப்பொழுதும் அது ஒரு வெறுக்கத்தக்க பயணமாகவே அமைந்திருக்கிறது. ஆம். தியாகராய நகரிலிருந்து இருசக்கர வாகனத்தில் ப.ம.சா. (பழைய மகாபலிபுரம் சாலை) வழியாக செல்லும் அனுபவம் சோர்வை தரக்கூடிய ஒன்றாகவே எனக்கு இருந்திருக்கிறது.
இதற்கு நிறைய காரணிகள் உள்ளது. கொஞ்சமும் நிதானமற்ற மனநிலையில் வாகனம் செலுத்தும் ஓட்டுனர்கள். பனி சுமையின் தாக்கத்தால் ஏற்படும் குழப்பமான ஒரு சூழ்நிலை. போக்குவரத்து விதிகளை மீறும் ஒரு சுவாரசியம். அதனால் ஏற்படும் பாதிப்புகளை அறியாத அல்லது அறிந்துகொள்ள விருப்பமில்லாத மனோபாவம்.
நான் இந்த வழித்தடத்தில் நிறைய விபத்துக்களை பார்த்திருக்கிறேன். அதில் பல விபத்துகள் அலட்சியத்தால் மட்டுமே ஏற்படுகிறது. அது அடுத்தவரின் மனநிலையை வெகுவாக பாதிக்கும் ஒரு அபாயம் உள்ளது. அது நம் ஆழ்நிலையில் நமக்கு வாகனம் இயக்க தெரியுமா என்ற அடிப்படை குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறது.விபத்தை எதிநோக்கியே வாகனத்தை செலுத்தும் ஒரு பிம்பம் நம்மை அறியாமல் ஆட்கொள்கிறது.
இதற்கெல்லாம் தீர்வு இல்லாமல் ஒன்றும் இல்லை. அனால் தீர்வை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க மனம் ஒப்புவதில்லை. இது சட்டத்தால் மட்டுமே தீர்க்க முடியும் என்றில்லை. தனிமனித ஒழுக்கம், சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறை, சரியான திட்டமிடல் போன்ற சில விஷயங்களினால் கூட இது சாத்தியமே.
சிலருக்கு யோசித்துக்கொண்டே வாகனம் செலுத்தும் ஒரு வழக்கம் உண்டு. அது அனிச்சை செயலாக இருக்கும். அவர்களுடைய ஆழ்மனம் வாகனத்தை செலுத்திகொண்டிருக்கும். அதற்கு இந்த சாலை பழக்கப்பட்ட ஒன்றாக இருப்பதால், ஓட்டுனரை அது கேட்பதில்லை. அசாதாரமான நிகழ்வு ஒன்று நடக்கும்போது அதால் முடிவெடுக்க இயலாமல், குழம்பி விபத்தில் முடிந்து விடுகிறது.
முடிந்தவரை யாரையும் வசைபாடாமலும் , யாரிடமும் வசைபடாமலும் சென்றாலே அது ஒரு சாதனை தான். மேலும் ஒருவரை போக்குவரத்து நெரிசலில் திட்டும் சூழ்நிலையில், அது ஒரு எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது. மனிதர்களின் மேலே ஒரு தற்காலிக வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறது. இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விதிகளை மீறும் ஒரு பேருந்தை கண்டால் வரும் கோபம், அதே பேருந்தில் நாம் பயணிக்கும் பட்சத்தில் அந்த விதிமீறலை ரசிக்க ஆரம்பித்து விடுகிறது. இதனால் நமக்கு இந்த சமுதாயத்தின் மேல் இருக்கும் கோபம் போலியான ஒன்றாகிவிடுகிறது. சுயஇகழ்ச்சிக்கு ஆளாகிறோம்.
இதையெல்லாம் போக்குவரத்து விதிகளை மதிப்பதால் மட்டுமே தீர்க்க இயலும். நம் வாழ்கையின் முக்கியங்களை வரிசைபடுத்தி பார்க்கும் போது, உயிர் முதலிடத்தில் இருப்பது அவசியம்.
பயணங்களை இனிமையாக்குவோம். சென்றடைவது மட்டும் பயணமல்ல, நல்ல அனுபவமாக இருப்பது தான் பயணம்.

Good start..Expecting more from you Pras anna.All the best!!!
ReplyDeleteSaranya Karthik

Good one Prasanna..Pour more of your creativity ...will reach heights soon..All the very best..Well articulated...
ReplyDeleteGood one Prasanna..Pour more of your creativity ...will reach heights soon..All the very best..Well articulated...
ReplyDeleteGood one Prasanna..Pour more of your creativity ...will reach heights soon..All the very best..Well articulated... Sathya

ReplyDelete