எனக்கு உடல் தீடீரென்று அசதியாக இருந்தது. சாப்பிட்டு விட்டு தூங்கலாம் என்றால் அது வரை பொறுமை இல்லை. ஆனால் பசி மட்டும் வயிற்றை கிள்ளியது. அதிகப்படியான பசி வயிற்றை குமட்டியது. எருக்களிப்பது போன்ற ஒரு உணர்வு. வேகமாக அள்ளி நான்கு கவளம் முழுங்கி விட்டு படுத்துவிட்டேன். அரைகுறையான தூக்கம். கால்கள் இரண்டும் வெட்டி இழுப்பது போல ஒரு உணர்வு. யானை தன் கால்களால் அழுத்தி மிதிப்பது போல வலி. சத்தம் போட்டு கத்த வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் சப்தம் எழவில்லை. நாக்கு மட்டும் தன்னிச்சையாக குழறி கொண்டிருந்தது. இது போல ஒரு உணர்வு இதுவரை எனக்கு ஆனதில்லை. தண்ணீர் குடித்தால் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் எழ முடியவில்லை. "தண்ணீர், தண்ணீர்" என்று மெதுவாக உளறிக்கொண்டிருந்தேன். யாரோ ஒரு பெரியவர் ஒரு ஜாடியில் தண்ணீர் கொண்டுவருவது தெரிந்து மெதுவாக கண் விழித்தேன். அருகில் வந்த அவர் தண்ணீரை குடிக்க தரவில்லை. அவர் ஜாடி தண்ணீரை என் முகத்தில் அப்படியே ஊற்றிவிட்டார். பயத்தில் கண்களை மூடிக்கொண்டேன்.
கண்களை விழித்து பார்த்தேன். என் முகத்தில் தண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. வெகுநாட்கள் தூங்கி எழுந்தது போல ஒரு புத்துணர்ச்சி. சுற்றி பார்த்தேன். அருகில் ஒரு ஓடை. தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. சிறிய பாறையின் மீதிருந்து தண்ணீர் என் முகத்தின் மீது விழுந்துகொண்டிருந்தது. இது என்னுடைய படுக்கையறை இல்லை. எழுந்து மெதுவாக நடக்கலானேன். இப்பொழுது நல்ல பசி எடுக்க ஆரம்பித்தது. ஓடையின் கரையில் நடக்க ஆரம்பித்தேன். தூரத்தில் ஒரு சிறிய குடிசை தெரிந்தது. குடிசையின் மேலே புகை வந்துகொண்டிருந்தது. கண்டிப்பாக குடிசையில் யாரோ சமைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற நினைப்பே பசியை தூண்டியது. குடிசையின் வாயிலை அடைந்து "சார் சார்" என்று அழைத்தேன். ஒரு பெண்மணி வெளியே வந்தார். என்னை ஒருமுறை பார்த்து"யார் நீங்கள், உங்களுக்கு யார் வேண்டும், எந்த நாடு நீங்கள்" என்றார். எனக்கு ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். ஒருவர் ஓடையிலிருந்து பரிசலில் அந்த குடிசையை நோக்கி வந்தார். இந்த பெண்மணியின் கணவனாக இருக்க வேண்டும். "எந்த நாட்டிலிருந்து வருகிறீர்கள், ஓடையின் அக்கரைக்கு செல்ல வேண்டுமா" என்றார். நான் மிகுந்த குழப்பத்துடன் "சார், எனக்கு ஒன்றும் புரியவில்லை, பசிக்கிறது" என்றேன்.
"மன்னியுங்கள், வீட்டின் உள்ளே வாருங்கள்" என்றார். குளிப்பதற்கு சூடான நீர் கொடுத்தார். அவருடைய உடை ஒன்றை கொடுத்தார். மிகவும் வித்தியாசமான உடை. எனது பள்ளி நாட்களில் ஆண்டு விழா நாடகங்களில் இது போல உடை அணிந்த ஞாபகம் வந்தது. சட்டென்று மனதில் ஒரு மின்னல். திரும்ப ஒருமுறை அவர்களின் வீட்டை நோட்டம் விட்டேன். சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தேன். மின்சார பொருட்கள் இல்லை. எங்கள் வீட்டில் உள்ள பொருட்கள் எதுவும் அங்கு இல்லை. ஐயோ, இது என்ன, நான் எங்கு வந்துவிட்டேன் ? கடைசியாக அந்த பெரியவர் முகத்தில் தண்ணீர் ஊற்றியது மட்டும் ஞாபகம் வந்தது. "ஐயா வாருங்கள், உணவு அருந்தலாம்" என்றார். அரச இலை போன்ற ஒன்றின் மீது கம்பு அடை இரண்டு, கீரை கூட்டு இருந்தது. நல்ல பசி. இன்னும் இரண்டு அடை கேட்டு சாப்பிட்டேன். ஒரு மணி நேரம் தூங்கியிருப்பேன். அவர், "நான் நகரத்திற்கு செல்கிறேன்" என்றார். நானும் வருகிறேன் என்று அந்த பெண்மணியிடம் நன்றி சொல்லி விட்டு கிளம்பினேன்.
அவரது பரிசலில் அக்கரைக்கு கிளம்பினோம். "ஐயா இது என்ன ஆறு" என்றேன். "வெண்ணாறு" என்றார். "நாம் இப்பொழுது எங்கே செல்கிறோம்" என்றேன். "தஞ்சைக்கு" என்றார். "தஞ்சை", நான் பிறந்து வளர்ந்த ஊர் ஆயிற்றே!!! இப்பொழுது வேலை நிமித்தம் சென்னையில் இருக்கிறேன். இது என்ன நான் பரிசலில் தஞ்சைக்கு போய்க்கொண்டிருக்கிறேன் !!! வெண்ணாற்றின் கரை வந்தடைந்தோம். அவர் பரிசலை ஒரு மரத்தில் கட்டினார். "வாருங்கள் போகலாம்" என்றார். நான் மினி பஸ் வரும் என்ற நினைப்பில் இருந்தேன். பிறகு சுதாரித்து கொண்டேன், மனதில் சிரித்து கொண்டேன். அது தஞ்சைக்கு செல்லும் ராஜபாட்டை என்று கூறினார். இரு பக்கமும் விசாலமான மாளிகைகள். திண்ணையில் மக்கள் அமர்ந்து தாயம் விளையாடிக்கொண்டிருந்தார்கள். குதிரையில் வீரர்கள், கையில் வேலுடன் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். நான் மிரட்சியுடன் நடந்துகொண்டிருந்தேன். தஞ்சைபுரீஸ்வரரை வணங்கி நடக்கலானோம். கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. மக்கள் ஆரவாரமுடன் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். வழிப்போக்கர்களுக்கு நீர்மோர், பானகம் தந்தார்கள். அன்னதானம் நடந்துகொண்டிருந்தது. வழிப்போக்கர்கள் திண்ணையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு வீட்டின் தலைவர் வெற்றிலை பாக்கு வைத்து தாம்பூலம் கொடுத்தார். மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.
நாங்கள் ஒருவர் வீட்டில் உணவருந்தி, சிறிது ஓய்வெடுத்தோம். நல்ல உறக்கம். பரிசல்காரர் தனக்கு சிறிய வேலை இருப்பதாகவும், இரவு உணவு அருந்த வீட்டிற்கு வந்துவிடவேண்டும் என்று கையை பிடித்து உரிமையுடன் கூறினார். நான் நன்றி கூறினேன். பிறகு நான் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன். அந்த இடம் வடக்கு மாட வீதி என்று அறிந்து கொண்டேன். மேல வீதி வழியாக நடந்து சென்றேன். தூரத்தில் இமயமலை ஒன்று நிற்பது போல ஒரு கோவில். ஆம். அது பெருவுடையார் ஆலயம். தஞ்சை பெரிய கோவில். கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நான் நெருங்க நெருங்க அது இன்னும் வளர்ந்து கொண்டிருப்பது போல உணர்ந்தேன். சட்டென்று ஒரு பரபரப்பு. காவலர்கள் வழி ஏற்படுத்தி கொண்டிருந்தார்கள். நான் ஓரமாக நின்றேன். நல்ல கூட்டம். நான் அருகில் இருந்தவரிடம், "ஐயா, இன்று என்ன விஷேஷம், யார் வருகிறார்கள், ஏன் இந்த பரபரப்பு" என்றேன். "மாமன்னர் வருகிறார்" என்றார். "மாமன்னர், யார் ஐயா" என்று தயக்கத்துடன் கேட்டேன். ஒரு நொடி என்னை பார்வையால் சுடுவது போல பார்த்தார். "மாமன்னர் ராஜராஜர் வருகிறார்" என்று வானத்தை நோக்கி கும்பிட்டு கூறினார். எனக்கு உடம்பில் ஒரு மின்னல் வெட்டிய உணர்ச்சி. கை, கால் பரபரக்க ஆரம்பித்தது. கண்களில் என்னை அறியாமல் ஆனந்த கண்ணீர்."மாமன்னர் ராஜராஜர் வாழ்க" என்று நானும் என்னையறியாமல் கூட்டத்துடன் கூறினேன். திடீரென்று எங்கும் ஒரு நிசப்தம். தூரத்தில் மாமன்னர் தேரில் வருவது தெரிந்தது. எங்கும் ஒரே ஆரவாரம், "சோழம், சோழம், சோழம், சோழம்"....
(கற்பனை தொடரும்)...