அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. மிக தாமதமாக கண்விழித்து, ஹால் சோபாவில் சோம்பலுடன் படுத்திருந்தேன். ஏதோ படபடப்பாகவே இருந்தேன். இந்த வீட்டிற்கு குடி வந்ததிலிருந்து இப்படி தான் இருக்கிறது. திடீரென உள்ளே ஏதோ பாத்திரம் உருளும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன். ஒருவேளை பூனையாக இருக்கும் என்று நினைத்தேன். தலைக்கு மேல் மணி அடிக்கும் சத்தம் கேட்டு கண்விழித்து விட்டேன். ஒரு வேளை கனவாக இருக்குமோ. ஆசுவாசப்படுத்தி கொண்டு படுத்தால், மீண்டும் மணி அடிக்கும் சத்தம். கண்டிப்பாக இது கனவில்லை. மெதுவாக கதவருகில் சென்று நின்று கொண்டிருந்தேன். கதவிற்கு அருகில் இருக்கும் கண்ணாடியின் திரைசீலையை விலக்கி பார்த்தேன். யாரும் இல்லை. யோசித்து கொண்டே திரும்பினால், மீண்டும் மணி அடிக்கும் சத்தம். இந்தமுறை, வெளியில் அவன் இரண்டு பெரிய பைகளுடன் நின்றிருந்தான். ஒரு நிமிடம் யோசித்து விட்டு கதவை திறந்தேன்.
"என்னடா எப்படி இருக்கே, நான்தான்டா" என்று அறிமுகப்படுத்திகொண்டான். என்னுடைய பழைய நண்பன் தான். ஆனால் அவ்வளவு நெருக்கம் எல்லாம் இல்லை. பார்த்து பல வருடங்கள் வேறு ஆகிருந்தது. இன்று தான் இங்கு வந்து இறங்கிருக்கிறான் என்று யூகித்து கொண்டேன். கடைசியாக பல வருடங்கள் முன்பு அவனை கடுமையாக அவமான படுத்தியது மட்டுமே மங்கலாக ஞாபகம் இருக்கிறது.
"சொல்லுடா எப்படி இருக்கே, என்ன திடீர்னு" என்று கேட்டேன்.
"ஏன் உள்ளே கூப்பிட மாட்டியா" என்று பைகளை எடுத்து கொண்டு உள்ளே சென்று சோபாவில் அமர்ந்து கொண்டான். " என்னடா சந்தோஷமா இருக்கே போல" என்று வீட்டை ஒரு நோட்டம் விட்டான். "எங்க குடும்பத்த அவமான படுத்திட்டு நீ போயிட்ட. நாங்க ரொம்ப உடைஞ்சி போய்ட்டோம். நேரம் வரும்போது பாத்துக்கலாம்னு விட்டுட்டோம்" என்று சிரித்து கொண்டே சொன்னான். நானும் அசௌகரியமாக சிரித்தேன்.
"உன் வீட்ல தான் தங்கலாம்னு இருக்கேன்டா. நிறைய வேலை இருக்கு இங்க" என்று சொன்னான்.
"இல்லடா அது வந்து" என்று இழுத்தேன். "யாருடா இது" என்று என் காதருகே வந்து கேட்டான்
"எங்கடா" என்று சுத்திமுத்தி பார்த்தேன். "என்ன விளையாடறியா, கண்ணு முன்னாடி ஒரு பொண்ணு நிக்குது, யாருனு கேக்கற" என்றான். "உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு கூட யாரும் ஊருல பேசிக்கலையே" என்று சிரித்தான்.
நானும் சிரித்தேன். "நீங்க எல்லாம் கொடுத்து வெச்சவங்கடா. இங்க வரவங்க எல்லாம் அந்த பொண்ண பாத்துட்டு யாருனு கேக்கறாங்க, ஆனா நான் இன்னும் பாக்கவே இல்லை" என்றேன்.
குழப்பமாக என்னையே பார்த்தான். "ஆமாம், என் வீட்டுக்கு வரவங்க சில பேரு கண்ணுக்கு மட்டும் அந்த பொண்ணு தெரியுது, ஆனா என் கண்ணுக்கு மட்டும் தெரியமாட்டேங்குது. வீட்டுக்கு வந்த புதுசுல எனக்கும் கூட கொஞ்சம் பயமா தான் இருந்துச்சு, அப்போஅப்போ சத்தம் வரும், மல்லிகை பூ வாசனை வரும், போகப்போக எனக்கும் சரினு அப்படியே பழகிடுச்சு" என்று டீபாய் மேல இருந்த மல்லிகை பூவை எடுத்து ஓரமாக வைத்தேன்.
நான் அமைதியாக டிவி பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் வெகுநேரமாக அமைதியாக அமர்ந்திருந்தான். கொஞ்சம் வேர்த்திருந்தான். "சரிடா, எனக்கு தெரிஞ்ச ஒருத்தன் இங்க தான் இருக்கான், அவனை பார்த்துட்டு வரேன்" என்று இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
"சரிடா" என்று அவன் போனபிறகு கதவை மூடிவிட்டு உள்ளே வந்தேன்.
"யாரு அவன்" என்று அவள் கோவமாக கேட்டாள்.
"என்னோட பழைய நண்பன் தான். பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு. கதவு கண்ணாடி வழியா பார்த்தவுடனே என்ன பண்றதுனு தெரியல. அவன் வேற ரெண்டு பேக் கொண்டு வந்திருந்தான். எப்படியும் இங்க தங்கறமாதிரி பிளான் போட்டு வந்திருப்பான். நம்ம ஒண்ணா இருக்கறது தெரிஞ்சா, வீட்ல சொல்லி பெரிய பிரச்சனை ஆயிடும்" என்று சொன்னேன். "நல்ல வேலை, நீ இந்த ஐடியா சொன்னே. அவனுக்கு தெரியாம இந்த பூவை எடுத்து வைக்கறதுக்குள்ள, எப்பா" என்று சிரித்தேன். பயந்து போய்ட்டான் என்று இருவரும் சிரித்தோம்.
"ஆனா உன் friend பெரிய முட்டாளா இருப்பான் போல, சொன்னதை அப்படியே நம்பி போய்ட்டான்" என்று சிரித்தாள். இருவரும் வெகு நேரம் சிரித்துக்கொண்டிருந்தோம். மீண்டும் மணி அடிக்கும் சத்தம். பொதுவாக இந்த வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள். யோசித்துக்கொண்டே கதவை திறந்தேன். அவன் தான் நின்றிருந்தான். "என்னடா" என்றேன்.
சிரித்துக்கொண்டே உள்ளே வந்தான். வாசல் கதவு திறந்தே இருந்தது. சோபாவில் உட்கார்ந்தான். "அவளை டீ கொண்டு வரச்சொல்லு" என்றான். "நான் எப்படிடா சொல்லுவேன், நான் தான் அவளை பார்த்ததே இல்லைனு சொன்னேன்ல" என்றேன்.
கடகடவென சிரித்தான். "உன் போன் நம்பர் வாங்கி, உன் அட்ரஸ் கண்டுபிடிக்கும் போதே, எனக்கு தெரியும்டா எல்லாம். சரி, நீ என்னதான் பண்றேனு பாக்கலாம்னு நெனச்சேன். ஆனா பேய் ட்ராமா எல்லாம் ரொம்ப ஓவர்" என்று சிரித்தான். எங்கள் இருவரையும் பார்த்து கண்அடித்தான்.
"நான் குளிச்சிட்டு வரேன்" என்று உள்ளே சென்றான். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம். என்ன செய்வது என்று தெரியவில்லை. டீபாயின் மீது இருந்த எனது மொபைல் போன் சத்தம் செய்தது. வாட்ஸாப்ப் நோட்டிபிகேஷன். அது எங்கள் ஊர் நண்பர்கள் குரூப்.
ஓபன் செய்து பார்த்தேன். "இன்று அவனுக்கு பத்தாம் ஆண்டு நினைவு நாள்" என்று அவன் போட்டோவுடன் வந்திருந்தது. கால்கள் நடுங்க, உதடுகள் வெடித்து, நெஞ்சில் ஏதோ அடைப்பது போல இருந்தது. திரும்பி பார்த்தேன்.
வாசல் கதவு, ஜன்னல்கள் தானாக மூடிக்கொண்டது. டிவியில் 'என் கதை முடியும் நேரமிது' என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது.